உள்ளூர் செய்திகள்
உடுமலை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
உடுமலை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலை:
கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தற்போது, சென்னை, மதுரை, திருச்செந்தூர், கோவை ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
உடுமலை பகுதிகளில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொழிற்சாலை, தனியார் அலுவலகங்கள், கம்பெனிகளில் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு பயன்படும் வகையில்,
உடுமலை வழியாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.