உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா
சேத்துப்பட்டு நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் கோவில் 61ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது.
கடந்த 1-ந் திருவிழா கொடி ஏற்றப்பட்டது இதைத் தொடர்ந்து 2-ந் தேதி மயானக்கொள்ளை திருவிழா 3-ந் தேதி அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும் 4-ந் தேதி புஷ்ப பல்லக்கில் வீதஉலா 5-ந் தேதி ஓட வாகனத்தில் வீதி உலா 6-ந்தேதி வெள்ளித் தேரில் வீதி உலாவும் நடைபெற்றன.
நேற்று அம்மன் தேர் விழா நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக காலையில் விரதம் இருந்த சுமங்கலி பெண்கள் பல்வேறு வேண்டுதல்களை வேண்டி பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் கோவிலை சுற்றி ஊரணி பொங்கல் வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் தர்ம கர்த்தாக்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.