உள்ளூர் செய்திகள்
பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்ட காட்சி.

வேட்டவலத்தில் நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய அதிகாரிகள்

Published On 2022-03-07 15:15 IST   |   Update On 2022-03-07 15:15:00 IST
நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய அதிகாரிகளால் வேட்டவலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேட்டவலம்:

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அணுகுமுறை ஊராட்சிக்கு உட்பட்ட பொன்ன மேடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள தாங்கள் குளம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

மண்டல துணை தாசில்தார் கவுரி தலைமையில் பி.டி.ஓ. பரமேஸ்வரன், துணை பி.டி.ஓ. பாக்கியலட்சுமி, ஆர்.ஐ.அல்லி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தண்டபாணி, வி.ஏ.ஓ மாலதி, ஞானவேல் மற்றும் போலீசார் முன்னிலையில், குளத்திற்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்து, அங்கு ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News