உள்ளூர் செய்திகள்
தேவிகாபுரத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்ட சாலை.

தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழாவை வழக்கம் போல் நடத்த கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

Published On 2022-03-07 15:12 IST   |   Update On 2022-03-07 15:12:00 IST
தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழாவை வழக்கம் போல் நடத்த கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ளது தேவிகாபுரம் தேவிகாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்திர பெருவிழா 14 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதை ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் நடத்தி வந்தனர்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் மற்றொரு பிரிவினர் எங்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கீடு செய்து திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். இதற்கு வழக்கமாக திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இதையடுத்து நேற்று இரவு வழக்கம் போல் திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனைத்து கடைகளுக்கும் சென்று நாளை ஒரு நாள் (இன்று) அனைவரும் கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டம் செய்ய வேண்டும் என கேட்டனர்.

இதையடுத்து தேவிகாபுரம் கிராமத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் இன்று மூடப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் இன்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் வழக்கம்போல் திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் மற்றும் திருவிழா நடத்த அனுமதி கேட்ட ஒரு பிரிவினர் அனைவரையும்ம் அழைத்து கோவிலில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வழக்கமாக திருவிழா நடத்தும் பிரிவினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அவர்கள் அங்கிருந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Similar News