உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 15 பதவிகளை கைப்பற்றிய பெண்கள்

Published On 2022-03-06 14:06 IST   |   Update On 2022-03-06 14:06:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 15 பதவிகளை பெண்கள் கைப்பற்றினர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 14  நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் 273 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2-ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 14 தலைவர் மற்றும் 14 துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் பேரூராட்சிகளில் பெண்களின் ஆதிக்கம் உள்ளனர். 10 பேரூராட்சி தலைவர் பதவிகளில் சேத்துப்பட்டு, தேசூர், கண்ணமங்கலம், போளூர், பெரணமல்லூர், புதுப் பாளையம், வேட்டவலம் ஆகிய 7 பேரூராட்சி தலைவர் பதவியை பெண்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதேபோல் 10 பேரூராட்சிகளில் துணைத் தலைவர் பதவியை செங்கம், சேத்துப்பட்டு, தேசூர், கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், போளூர், புதுப்பாளையம், வேட்டவலம் ஆகிய 8 இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் 20 பதவிகளில் 15 பதவிகளை பெண்கள் கைப்பற்றியுள்ளனர்.

3 (செங்கம், களம்பூர், கீழ்பென்னாத்தூர்) தலைவர் மற்றும் 2 (களம்பூர், கண்ணமங்கலம்) துணை தலைவர் பதவிகளை மட்டுமே ஆண்கள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல் நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளில் ஆண்களின் ஆதிக்கம் உள்ளது. 4 நகராட்சிகளில் ஆரணி, வந்தவாசி, திருவத்திபுரம் (செய்யாறு) ஆகிய 3 நகராட்சித் தலைவர் பதவிகளையும் மற்றும் ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய 3 நகராட்சி துணை தலைவர் பதவிகளை ஆண்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதில் திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவி மற்றும் திருவொற்றியூர் நகராட்சி துணைத்தலைவர் பதவி என 2 பதவிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளனர்.

Similar News