உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Published On 2022-03-06 14:05 IST   |   Update On 2022-03-06 14:05:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடி செல்போன் திருட்டுகள் நடைபறுவதாக போலீஸ் நிலையங்களில் செல்போன் பறிகொடுத்தவர்கள் புகார் செய்துள்ளனர்.
 
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். தொழில் நுட்ப உதவியுடன் விசாரணை தீவிரமாக மேற்கொண்டனர். புகார்களின் அடிப்படையில் 100 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர் களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் தலைமை தாங்கி உரியவர்களிடம் செல் போன்கள் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News