உள்ளூர் செய்திகள்
வேலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

வேலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-05 14:03 IST   |   Update On 2022-03-05 14:03:00 IST
வேலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மாவட்ட தலைவர் பழனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தேவராஜ் வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர் ராமன் அறிமுக உரையாற்றினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி மாவட்ட செயலாளர் பரசுராமன் கோட்டத் தலைவர் சத்தியமூர்த்தி கோட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். 

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் கோஷமிட்டனர்.

Similar News