உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தண்டராம்பட்டில் பள்ளி ஆசிரியருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2022-03-05 13:49 IST   |   Update On 2022-03-05 13:49:00 IST
தண்டராம்பட்டு அருகே பள்ளி ஆசிரியருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அடுத்த கீழ் சிறுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் நேற்று பிள்ளை தந்தாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக திருவண்ணாமலை கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

தண்டராம்பட்டு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் தமிழரசி , வட்டார சமூக நல அலுவலர் அம்சவல்லி , கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் மைனர் பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் நடைபெ றுவது சட்டப்படி குற்றம் என்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் மைனர் பெண் மற்றும் அவருக்கு தாலி கட்ட இருந்த ஆசிரியர் சந்தோஷ் ஆகியோரை திருவண்ணாமலை தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Similar News