உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் நீச்சல்குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி
திருவண்ணாமலையில் நீச்சல்குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கபபட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தை தற்போது பொதுமக்கள் பயன்படுத்திடவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நீச்சல் குளத்தினை பயன்படுத்த வருபவர்கள் உரிய நீச்சல் உடையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீச்சல் குளத்தினை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக முககவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
கைகள் அழுக்காக இல்லாத போதும் கைகளை சோப்பினை பயன்படுத்தி சுத்தம் செய்தல் வேண்டும். ஆல்கஹால் சானிடைசர்களை சாத்தியமான இடங்களில் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நீச்சல்குளத்தினை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.