உள்ளூர் செய்திகள்
வந்தவாசி நகராட்சி

வந்தவாசி நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி

Published On 2022-03-04 16:27 IST   |   Update On 2022-03-04 16:27:00 IST
வந்தவாசி நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
வந்தவாசி:

வந்தவாசியில் நகரமன்ற தலைவர் தேர்தலில் திமுக நகர பொறுப்பாளர்கள் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் முஸ்தபா அறிவித்தார்.

வந்தவாசி 24 வார்டுகள் உள்ளது. இதில் சுயேட்சை வேட்பாளர்கள்&10,   திமுக 8 வார்டுகளிலும் அதிமுக 3 வார்டுகளிலும பாமக 2 வார்டுகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

இன்று நடைபெற்ற நகரமன்ற தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜலால் அதிமுகவை சேர்ந்த அம்பிகா மேகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

மறைமுக தேர்தலில் அம்பிகா மேகநாதன் 6 ஓட்டுகளும், ஜலால் 18 வாக்குகளும் பெற்றனர். ஜலால் வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையாளர் தேர்தல் அலுவலருமான முஸ்தபா அறிவித்தார். 

கட்சி பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News