உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி

Published On 2022-03-03 16:01 IST   |   Update On 2022-03-03 16:01:00 IST
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் பெற நாளை விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா   தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நாளை 4&ந்தேதி அன்று காலை 09.30 மணிக்கு நடைபெற உள்ளது.

வங்கி கடன் கோரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப் பிக்கலாம்.

இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப் பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப் பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கி கடன் வழங்க ஆவணச் செய்யப் படும். எனவே மாற்றுத் திறனாளிகள் இச்சிறப்பு வங்கிகடன் மேளாவில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம். இத்தகவலை பெரம்பலூர்  மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News