உள்ளூர் செய்திகள்
ஆரணி நகராட்சியில் இளைஞர் பட்டாளம் அதிகளவில் கவுன்சிலர்களாக தேர்வு
ஆரணி நகராட்சியில் முதன் முறையாக இளைஞர் பட்டாளம் அதிகளவில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குபட்ட 33வார்டுகளில் கடந்த மாதம் 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்று 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், ம.தி.மு.க., காங்கிரஸ் தலா 2 வார்டுகளிலும் சுயேட்சை 1 வார்டுகளில் உள்ளிட்ட 33வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் நேற்று ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் 33வார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
ஆரணி நகராட்சியில் முதல் முறையாக 30 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இளைஞர்கள் 10 பேர் பதவி ஏற்று கொண்டனர்.
இதில் தி.மு.க.வை சேர்ந்த 20-வது வார்டு 21 வயது இளம் பட்ட படிப்பு படித்து கொண்டிருக்கும் ரேவதி, 9-வார்டு இஷ்ரத் ஜபின், (22) என்ற இளம்பெண் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சுதா என்ற இளம்பெண், 6-வது வார்டு பானுப்பிரியா, 29-வது வார்டு சசிகலா, 31-வது வார்டு கிருபா சமுத்திரி ஆகிய இளம் பெண்கள் பதவி ஏற்று கொண்டனர்.
அதே போல தி.மு.க.வை சேர்ந்த 4-வது வார்டு உறுப்பினர் ஆர்.எஸ்.பாபு 23-வது வார்டு உறுப்பினர் அரவிந்த், 30-வது வார்டு உறுப்பினர் கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட இளம் பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட 10 பேர் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளனர்.
மேலும் ஆரணி நகர மன்ற வரலாற்றில் முதன்முறையாக இளம்பெண்கள் இளைஞர்கள் பட்டதாரிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.