உள்ளூர் செய்திகள்
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது
பெரம்பலூர்:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022&23 அரைவை பருவத்தில் எத்தனால் தயாரிப்பு தொழிற்பிரிவை நிறுவன வேண்டும். வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்து கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24&ந்தேதி சென்னை கோட்டை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கனகராஜ், செல்வராஜ், முருகானந்தம், இளையராஜா, காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.