உள்ளூர் செய்திகள்
கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

நீலகிரியில் 294 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்

Published On 2022-03-02 17:19 IST   |   Update On 2022-03-02 17:19:00 IST
நகராட்சி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டு கள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த 19&ந் தேதி வாக்குப்பதிவு நடந் தது. 22&ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு கள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 294 கவுன் சிலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர். வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இன்று நடந்தது.ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டு இருந்தன. அங்கு நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அமருவதற்கான இருக்கைகளும் தயார் நிலையில் இருந்தது.

இன்று காலை ஊட்டி நகராட்சியில் வெற்றி பெற்ற 36 பேரும் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் உள்ளே சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.காலை 10 மணிக்கு விழா தொடங்கியதும், ஒவ்வொரு கவுன்சிலர்களாக தனித் தனியாக உறுதிமொழியை வாசித்து கவுன்சிலர்களாக பதவி யேற்றனர். நகராட்சி கமிஷ னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதேபோல் நெல்லியாளம், கூடலூர், குன்னூர் நகராட்சிகள் மற்றும் கோத்தகிரி, நடுவட்டம் உள்பட  11 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்று கொண்டனர். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அனைத்து அலு வலகங்களும் விழாக் கோலத் துடன் காட்சியளித்தது.நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளுக்கும் தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Similar News