உள்ளூர் செய்திகள்
மர்ம விலங்கு கடித்து இறந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

வேட்டவலத்தில் 52 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

Published On 2022-03-02 16:40 IST   |   Update On 2022-03-02 16:40:00 IST
வேட்டவலம் அருகே 52 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேட்டவலம்:

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 60) விவசாயி இவர் மட்டப்பாறையில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 110 ஆடுகளை வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். 

காலை சென்று பார்த்தபோது அங்கு இங்கே உடல் சிதறிய நிலையில் ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம விலங்கு கடித்து அதில் மொத்தம் 52 ஆடுகள் இறந்து கிடந்தது 8 ஆடுகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வி ஏ ஓக்கள் ஜாய், ராஜீவ் காந்தி ஆர் ஐ அல்லி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் தகவல் அறிந்து அவர் கால்நடை மருத்துவர் கவிதா நேரில் வந்து ஆடுகளை பார்வையிட்டு சம்பவ இடத்தில் இறந்த ஆடுகளின் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் இறந்த ஆடுகளை பள்ளம் தோண்டி புதைத்தனர். 

மேலும் எந்த விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது என்பது குறித்து கால்நடை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News