உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 273 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு.

Published On 2022-03-02 16:28 IST   |   Update On 2022-03-02 16:28:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 4 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 273 கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகள் என 14 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 19&ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

ஏற்கனவே போளூர் பேரூராட்சி 5-வது வார்டில், போட்டியின்றி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் 272 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை 22&ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில் திருவண்ணாமலை நகராட்சியில் (39 வார்டுகள்) 31 வார்டுகளில் தி.மு.க.வும், 6 வார்டுகளில் அ.தி.மு.க., 2 வார்டுகளில் சுயேட்சையும் வெற்றி பெற்றது. இதேபோல் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் (27 வார்டுகள்) 18 வார்டுகளில் தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் பாமகவும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் ஒரு வார்டில் காங்கிரசும் வென்றது.

ஆரணி நகராட்சியில் (33 வார்டுகள்) 15 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 12 வார்டுகளில் தி.மு.க.வும், தலா 2 வார்டுகளில் காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க.வும், ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்றன.

வந்தவாசி நகராட்சியில் (24 வார்டுகள்) 10 வார்டுகளில் சுயேச்சைகளும், 8 வார்டுகளில் தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், 2 வார்டுகளில் பாமகவும் வெற்றி பெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் (123வார்டுகள்) 69 வார்டுகளில் தி.மு.க.வும், 27 வார்டில் அ.தி.மு.க.வும், 16 வார்டுகளில் சுயேச்சைகளும், 4 வார்டுகளில் பா.ம.க.வும், 3 வார்டுகளில் காங்கிரசும், 2 வார்டுகளில் ம.தி.மு.க.வும், தல ஒருவார்டில்விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வெற்றி பெற்றன.

இதேபோல் 10 பேரூராட்சிகளில் (150 வார்டுகளில்), 85 வார்டுகளில் தி.மு.க.வும், 31 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 14 வார்டுகளில் சுயேச்சைகளும், தலா 6 வார்டுகளில் பா.ம.க. மற்றும் காங்கிரசும், 2 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலா ஒரு வார்டுகளில்  பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், அ.ம.மு..க, தே.மு.தி.க. வென்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 273 வேட்பாளர்களும் இன்று பதவியேற்றனர். இதையொட்டி நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் வரும் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

Similar News