உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

Published On 2022-03-02 15:32 IST   |   Update On 2022-03-02 15:32:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 81 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் தி.மு.க.வும், 3 இடங்களில் அ.தி.மு.க.வும், 2 இடங்களில் சுயேட்சையும், ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்றது.

குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றது.

அரும்பாவூர் பேரூராட்சியில்  மொத்தமுள்ள  15 வார்டுகளில் 8 இடங்களில் தி.மு.க.வும், 6 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது.

பூலாம்பாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 இடங்களிலும் தி.மு.க.வும். 2 இடங்களில் அ.தி.மு.க.வும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது.

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 7 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக் கட்சியும், 3 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும், தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. ஒரு இடத்திலும் 2 இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அம்பிகா, துணை தலைவர் பதவிக்கு ஹரிபாஸ்கரும், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சங்கீதா, துணை தலைவர் பதவிக்கு கீதாவும், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வள்ளியம்மை, துணை தலைவர் பதவிக்கு சரண்யாவும், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாக்கியலட்சுமி, துணை தலைவர் பதவிக்கு செல்வலட்சுமியும், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு தலைவர்  பதவிக்கு ஜாஹிர்உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Similar News