உள்ளூர் செய்திகள்
பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவ ராத்திரி விழா
எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவ ராத்திரி விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவ ராத்திரி விழா நடை பெற்றது.
மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடந்த மகா சிவராத்திரி விழாவிற்கு டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார். தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசி நாதன், ராதா மாதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6 மணி முதல் மலைமீது சிவஜோதி ஏற்றி நான்கு கால வேள்வி பாராயணம் நடந்தது. விழாவில் நடிகர் தாமு உடல் எனும் திருக்கோயில் எனும் தலைப்பில் பேசினார். வில்லிசை வேந்தர் கிஷோர் குமார் தலைமையிலான வில்லுப் பாட்டு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மஹா பூர்ணாகுதியுடன் சாதுக்களுக்கு வஸ்திர தானமும், மூதாட்டி களுக்கு புடவை தானமும், அன்ன தானமும் நடை பெற்றது.
விழாவில் சினிமா டைரக்டர் சண்முகபிரியன், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட நீதிபதி கருணாநிதி, எஸ்.பி. மணி, சிலை திருட்டுதடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜா ராம், ஊராட்சி தலைவர் சித்ராதேவி, திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜா சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.