உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் சோதனை - பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய நபர்களுக்கு மொத்தம் ரூ.1,07,650 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப் படும் பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர்கள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி நகராட்சி பகுதியில் ஓட்டல்கள், பேக்கரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 3 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6 ஆயிரம் அபராதமும், ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 700 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,300அபராதமும், பேரூ ராட்சி பகுதியில் 750 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
குன்னூர் நகராட்சி பகுதி யில் 350 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1000 அபராதமும், ஊராட்சி பகுதியில் 400 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.800 அபராதமும், உலிக்கல், ஜெகதளா, கேத்தி பேரூராட்சி பகுதியில் 260 கிராம் பறி முதல் செய்யப்பட்டு ரூ.2,300 அபராதமும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 1 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,500 அபராதமும், பேரூராட்சி பகுதியில் 750 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000 அபராதமும், கூடலூர் நகராட்சி பகுதியில் 1 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4,000 அபராதமும், கூடலூர் ஊராட்சி பகுதியில் 8.350 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16,450 அபராதமும், தேவர்சோலை பேரூராட்சிப்பகுதியில் 750 கிராம் பறிமுதல் செய்யப் பட்டு ரூ.1,300 அபராதமும் விதிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் தலைமையில் ஊட்டி நகராட்சி பகுதி யில் ஆய்வு மேற்கொண்டதில் ரூ.12 ஆயிரமும், தனியார்
பிளாஸ்டிக் கடையில் தடைசெய்ய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய மைக்காக ரூ.55,500 அபராதமும் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய நபர்களுக்கு மொத்தம் ரூ.1,07,650 அபராதம் விதிக்கப்பட்டுள் ளது.