உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
மூலவர் சாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன்தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திப் பெற்ற பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ் வரர் கோவிலில் மாசி மாத சோம வார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன்தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை ஆகியமலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.