உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வனவிலங்குகள் தாக்கி பலியான கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை

Published On 2022-02-28 14:53 IST   |   Update On 2022-02-28 14:53:00 IST
மசினகுடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
ஊட்டி:

முதுமலை புலிகள் காப்பக வனத்தையொட்டிய மசினகுடி சுற்றுப்புறக் கிராமங்களில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த 10 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், ஐந்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1500 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

உலக வன விலங்குகள் நிதியம், மாரியம்மா அறக்கட்டளை, அருளகம் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த இழப்பீட்டு தொகையை வழங்கின. மசினகுடி ஊராட்சி மன்ற உறுப்பினர்  உத்தமன், பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில், ஊட்டி அரசு கலைக் கல்லூரி வன விலங்குகள் துறை பேராசிரியர் மோகனகிருஷ்ணன், கழுகு ஆராய்ச்சியாளர்  மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News