உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Published On 2022-02-28 12:36 IST   |   Update On 2022-02-28 12:36:00 IST
எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை நடக்கிறது.
பெரம்பலூர்:


பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது.

மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் மகாசிவராத்திரி விழாவைவையொட்டி காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நாளை (1ம்தேதி) மலைமீது சிவஜோதி ஏற்றி நான்குகால வேள்வி பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் 2&ந் தேதி காலை மஹா பூர்ணாகுதியுடன் சாதுக்களுக்கு வஸ்திரதானமும், மூதாட்டிகளுக்கு புடவை தானமும், அன்னதானமும் நடைபெறுகிறது.

விழாவில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட நீதிபதி கருணாநிதி, எஸ்பி மணி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், ஊராட்சி தலைவர் சித்ராதேவி, திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜாசிதம்பரம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 

நடிகர் தாமு உடல் எனும் திருக்கோயில் எனும் தலைப்பில் பேசுகிறார். வில்லிசை வேந்தர் கிஷோர் குமார் தலைமையிலான வில்லுப்பாட்டு குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணிமாதாஜி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், ராதா மாதாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News