உள்ளூர் செய்திகள்
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமணை இணைந்து “தொடர் மருத்துவ கல்வி” எனும் தலைப்பில் மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் தலைவருமான சீனிவாசன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்தார். இந்திய மருத்துவ சங்க தலைவர் வல்லபன். செயலாளர் சுதாகர், பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நரம்பியல் நிபுணரும், பேராசிரியருமான அலிம், மேம்பட்ட தீவிர பக்கவாத மேலாண்மை குறித்தும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்பாஸ்கர், உயர்தர சிகிச்சையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முறை விரிவாக எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவம் சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.