உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-02-28 11:28 IST   |   Update On 2022-02-28 11:28:00 IST
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:


பெரம்பலூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் ரொக்க பணத்தை திருடிச்சென்றனர்.
பெரம்பலூர் துறைமங்கலம் பெட்ரோல் பங்க் பின்புறம் அவ்வையார் நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பரமேஸ்வரன் (வயது 37).

இவர் கடந்த 25-ந் தேதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

சிகிச்சைக்கு பிறகு தனது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.28 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பரமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News