உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சின்ன வெங்காயம் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-02-27 14:20 IST   |   Update On 2022-02-27 14:20:00 IST
சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.30 என கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர்:

தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க  மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை பெரம்பலூரில் நடைபெற்றது.

 கூட்டத்தில், மத்திய அரசு நுகர்வோர் நலத்துறை மூலம் பெரிய வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் பருவத்தில், கிலோ ரூ.21&க்கு கொள்முதல் செய்துள்ளதுபோல, சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.30&க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி மார்ச் 7-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, 

ஆலை நவீனப்படுத்தப்பட்ட பிறகும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அடிக்கடி எந்திரங்கள் பழுது ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெரம்பலூர் சர்க்கரை ஆலையை பழுதின்றி இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். 

திட்டம் தொடங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் கொட்டரை நீர்த்தேக்க திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இத்திட்டத்தை விரைந்து முழுமையடைய செய்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News