உள்ளூர் செய்திகள்
உழவர்களுக்கு சிறுதொழில் பயிற்சி தொடக்க விழா
உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் சிறு தொழில் பயிற்சி பெற்று தொழில் தொடங்கி வருவாயை பெற்று பயன் பெறலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்களுக்கு சிறு தொழில் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
நபார்டு வங்கி சிறுதொழில் பயிற்சி வழங்க வெப்சா உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அங்கீகரித்து திட்டம் ஒதுக்கியுள்ளது. இதன்படி சிறுதொழில் பயிற்சி தொடக்க விழாவிற்கு நபார்டு வங்கியின் பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி அலுவலர் நவீன்குமார் தலைமை வகித்து பேசுகையில்,
இத்திட்டத்தின் மூலம் 90 உறுப்பினர்களுக்கு காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, சிறுதானியம் மதிப்புக் கூட்டுதல் மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு பயிற்சி அளித்து, திட்ட அறிக்கை தயாரித்து, வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
எனவே உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் சிறு தொழில் பயிற்சி பெற்று தொழில் தொடங்கி வருவாயை பெற்று பயன் பெறலாம் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில வேளாண் துறையின் அரசு ஆலோசகர் முனைவர் வடி வேல் சிறப்பு ரையாற்றினார். தொடர்ந்து வேளாண் அறிவியல் மைய தலைவர் முனைவர் நேதாஜி மாரியப்பன், சிறு தொழிலின் அவசியம் குறித்தும், மாவட்ட தொழில் பயற்சி மைய இயக்குநர் ஆனந்தி தொழில் துவங்குவது குறித்தும் விளக்கி பேசினர்.
முன்னதாக வெப்சா உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குநர் மணிவாசன் வரவேற்றார். முடிவில் கோதரணி உழவர்கள் உற் பத்தியாளர் நிறுவன இயக்குநர் வேலுச் சாமி நன்றி கூறினார்.