உள்ளூர் செய்திகள்
கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ஆரணியில் குளத்தை தனியாருக்கு குத்தகை வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2022-02-26 14:35 IST   |   Update On 2022-02-26 14:35:00 IST
ஆரணி அருகே குளத்தை தனியாருக்கு குத்தகை வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் மையப்பகுதியில் வண்ணார் குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வண்ணார் குளத்தை குடிமராமத்து பணியில் சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணியை தற்போது பாதியில் நிறுத்திவிட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் தன்னிச்சையாக கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தை தனியாருக்கு மீன் குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து 50&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து குளத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக தனியாருக்கு தாரை வார்த்த குளத்தை மீண்டும் கிராம பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News