உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணியில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல்

Published On 2022-02-26 14:35 IST   |   Update On 2022-02-26 14:35:00 IST
ஆரணியில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 

இதனால் விரக்தியடைந்த வேட்பாளரின் குடும்பத்தினர் வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தாங்கள் வழங்கிய பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திருப்பி தரும்படி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கும், வேட்பாளரின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேட்பாளரின் தரப்பில் வாக்காளர்களை ஒருமையில் பேசி திட்டியதாகவும் கூறப்படுகிறது. 

 இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிலர் வேட்பாளர் சார்பில் வழங்கப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்களை திரும்ப கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆரணி டவுன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News