உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஐ.டி.ஐ. மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Published On 2022-02-26 13:55 IST   |   Update On 2022-02-26 14:48:00 IST
செய்யாறு அருகே ஐ.டி.ஐ. மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள தென்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்யாறில் ஐடிஐ படித்து வருகிறார். 

கடந்த 24-ம் தேதி ஐ.டி.ஐ.க்கு சென்று விட்டு செய்யாறில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு மாணவர்  வந்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் 2 பேர் முன்பகை காரணமாக மாணவரை பஸ்சிலிருந்து இறக்கி அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவருடன் வந்த அவரது நண்பர்கள் தடுத்துள்ளனர். 

இது சம்பந்தமாக மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து வாலிபர்  2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News