உள்ளூர் செய்திகள்
வேலூரில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
வேலூர் அண்ணா சாலையில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் சைதாப் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35) கூலித்தொழிலாளி.இவர் நேற்று அண்ணாசாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேட்டு இடையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த படையப்பா என்கிற ராஜா (23) என்பவர் வெங்கடேஷை வழிமறித்தார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 வழிப்பறி செய்தார்.
இதுபற்றி வெங்கடேஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.சப்& இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் வழிப்பறியில் ஈடுபட்டது படையப்பா என்கிற ராஜா என்பதைக் கண்டறிந்தனர். நேற்று மாலை அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.