உள்ளூர் செய்திகள்
வேலூர் தியேட்டர் வளாகத்தில் அஜித் ரசிகர்கள் பைக் சாகசம் செய்த காட்சி.

வேலூரில் பைக் சாகசம் செய்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

Published On 2022-02-24 14:52 IST   |   Update On 2022-02-24 14:52:00 IST
வலிமை திரைப்படத்தில் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் காட்சி ட்ரெய்லரில் வெளியாகியிருந்தன. அதேபோன்று அவருடைய ரசிகர்களும் தியேட்டர் வளாகத்தில் பைக்கில் சாகசம் செய்து கொண்டாடினர்.
வேலூர்:

வேலூரில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது. ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள், பேனர்கள் அதிகளவில் வைத்திருந்தனர். இதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அலங்கார் தியேட்டரில் நேற்று மாலை முதலே ரசிகர்கள் குவிய தொடங்கினர். அஜித் ரசிகர்கள் அந்த தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்க கூடிய அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளத்துடன் மாலை அணிவித்தனர்.

மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் காட்சி ட்ரெய்லரில் வெளியாகியிருந்தன. அதேபோன்று அவருடைய ரசிகர்களும் தியேட்டர் வளாகத்தில் பைக்கில் சாகசம் செய்து கொண்டாடினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் சாகசம் நடந்ததால் தியேட்டர் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News