உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் தாய் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-02-23 14:21 IST   |   Update On 2022-02-23 14:21:00 IST
வேலூரில் தாய் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஜான் ஜெயகரன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் ரொனால்டினோ இமானுவேல் (வயது 17). ஒரு மகள் உள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக ஜெயகரன் இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகன் மகளுடன் வசித்து வந்தார். 

ரொனால்டினோ இமானுவேல் டான் பாஸ்கோ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.மாலை நேரங்களில் வெல்டிங் வேலைக்கு சென்றார்.

படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டாம் என சுதா அவரது மகனை கண்டித்தார். 

இதனால் ரொனால் டினோ இமானுவேல் மனமுடைந்தார். நேற்று மாலை சுதா அவரது மகளுடன் வெளியே சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ரொனால்டினோ இமானுவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடுதிரும்பிய சுதா மகன் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதார். 

வேலூர் தெற்கு போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News