உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாநகராட்சியில் 49 வார்டுகளில் பா.ஜனதாவுக்கு 12,035 ஓட்டுகள் கிடைத்தது
5-வது வார்டில் மட்டுமே பா.ஜனதா 2,461 வாக்குகள் பெற்றுள்ளது. மற்ற வார்டுகளில் 31 முதல் 465 வாக்குகள் வரை பெற்று உள்ளன.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பா.ஜனதா கட்சி 50 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் ஒரு வார்டில் மனு நிராகரிக்கப்பட்டதால் 49 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் 49 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சி தோல்வி அடைந்தது.
வார்டு வாரியாக பா.ஜனதா பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
1 வார்டில் 341, 2-வது வார்டு 37, 3-வது வார்டு 121, 4-வது வார்டு 207, 5-வது வார்டு 2,461, 6-வது வார்டு 291, 7-வது வார்டு 101, 8-வது வார்டு 161, 9-வது வார்டு 148, 10 -வது வார்டு 444, 12-வது வார்டு 326, 13-வது வார்டு 192, 14-வது வார்டு 356,
16-வது வார்டு 70, 17-வது வார்டு 104, 19 வது வார்டு 197, 20-வது வார்டு 189, 21-வது வார்டு 178, 22-வது வார்டு 236, 23 -வது வார்டு 167, 25-வது வார்டு 70, 26-வது வார்டு 117, 27-வது வார்டு101, 28-வது வார்டு 267, 29-வது வார்டு 230, 31-வது வார்டு 83, 33 -வது வார்டு 122, 34-வது வார்டு 398, 35-வது வார்டு 396, 36-வது வார்டு 145, 38-வது வார்டு 148, 39 -வது வார்டு 107, 40-வது வார்டு 136,
41 -வது வார்டு 255, 42 -வது வார்டு 235, 44 -வது வார்டு 31, 45-வது வார்டு 218, 46 -வது வார்டு 177, 47-வது வார்டு 172, 48 -வது வார்டு 395, 49-வது வார்டு 245, 50 -வது வார்டு 282, 52-வது வார்டு 120, 53-வது வார்டு 81, 54 -வது வார்டு 84, 56 -வது வார்டு 467, 57 -வது வார்டு 211, 58 -வது வார்டு 196, 60-வது 211 என 49 வார்டுகளிலும் சேர்த்து பா.ஜனதா கட்சி 12 ஆயிரத்து 35 வாக்குகள் பெற்றுள்ளது.
இதில் 5-வது வார்டில் மட்டுமே பா.ஜனதா 2,461 வாக்குகள் பெற்றுள்ளது. மற்ற வார்டுகளில் 31 முதல் 465 வாக்குகள் வரை பெற்று உள்ளன.