உள்ளூர் செய்திகள்
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்த காட்சி.

ஒரே இடத்தில் குவிந்த அரசியல் கட்யினர் கொரோனா பரவும் அபாயம்

Published On 2022-02-22 16:34 IST   |   Update On 2022-02-22 16:34:00 IST
வேலூர் ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து ஒரே இடத்தில் குவிந்த அரசியல் கட்யினர் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில் பங்கேற்கும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் காலை 7 மணிக்கு முன்பாக வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏஜென்டுகள் பலர் காத மதமாக வந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் 100 மீட்டருக்கு முன்பாகவே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏஜென்டுகள் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் அந்த இடத்தில் கடும் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இதன் மூலம் கொரோனா பரவும் நிலையும் ஏற்பட்டது.

தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று மாநகராட்சி வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதனால் பாகாயத்திலிருந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரி ஜெயில் வழியாக தொரப்பாடி பகுதிக்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. அனைத்து வாகனங்களும் ஆரணி சாலையில் திருப்பி விடப்பட்டன.

பாகாயம் சந்திப்பு மற்றும் தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை திருப்பிவிட்டனர்.

வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதும் ஒலிபெருக்கி மூலம் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க., சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் அருகே குவிந்திருந்தனர். 

அவர்கள் வெற்றி செய்தியை கேட்டதும் கைதட்டலுடன் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.இதனால் அந்த பகுதி இன்று பரபரப்பாக காணப்பட்டது.

Similar News