உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டு நகராட்சியை கைப்பற்றிய தி.மு.க. ஒரு வார்டில் கூட வெற்றி பெறாத அ.தி.மு.க.
பேரணாம்பட்டு நகராட்சியை கைப்பற்றிய தி.மு.க. ஒரு வார்டில் கூட அ.தி.மு.க வெற்றி பெறவில்லை.
வேலூர்:
பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. பேரணாம்பட்டு அடுத்த கொண்டபல்லி கிராமத்தில் மரித் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் திமுக 16 இடங்களை கைப்பற்றியது.
சுயேட்சை 4 வெற்றியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
2006-ல் திமுக வெற்றி பெற்றிருந்தது. 2011இல் மீண்டும் வெற்றி பெற்றது திமுக. 10 வருடத்திற்கு பின்பு மீண்டும் திமுக வெற்றியை தன்வசம் படுத்தியுள்ளது.