உள்ளூர் செய்திகள்
ஜெயிலில் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்- டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேச்சு
ஜெயிலில் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேசினார்.
வேலூர்:
வேலூர் சிறை காவலர் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தலைமை காவலர்களுக்கு 5 நாள் புத்தாக்க பயிற்சி இன்று தொடங்கியது.
வேலூர் சரக டிஐஜி செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குனர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா பயிற்சியை தொடங்கி வைத்தார்.அவர் பேசியதாவது.
சிறைக்கு குற்றவாளியாக வரும் கைதிகள் குடும்ப சூழல் காரணமாக குற்றசெயலில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனர். வாழ்க்கைக்கு படிப்பு என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பயிற்சியும் முக்கியம்.
தொடர்ந்து பயிற்சி வழங்குவதால் மட்டுமே துறையில் சாதிக்க முடியும். அதீத நம்பிக்கையும் தவறுக்கு வழிவகுக்கும். சீருடை பணியாளர்களாகிய நீங்களும் நானும் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
இந்த பயிற்சியினை முறையாக பயன்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.