உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சேத்துப்பட்டில் விஷம் குடித்து டிரைவர் பலி

Published On 2022-02-21 14:49 IST   |   Update On 2022-02-21 14:49:00 IST
சேத்துப்பட்டில் விஷம் குடித்து டிரைவர் இறந்தார்.
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாகுல் முபாரக் (வயது 41) டிரைவர் இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

முபாரக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலன் அளிக்காமல் மனவேதனையில் இருந்து வந்தார்.

 நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாகுல் முபாரக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பிணத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News