உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகம் வாக்களித்த பெண்கள்

Published On 2022-02-20 14:37 IST   |   Update On 2022-02-20 14:37:00 IST
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.வேலூர் மாநகராட்சி தேர்தலில் 65.50 சதவீதம் வாக்குகள் பதிவானது.

குடியாத்தம் நகராட்சியில் 67.35 சதவீதம், பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 சதவீதம் வாக்குகள் பதிவானது.

ஒடுகத்தூர் பேரூராட்சியில் 78.78 சதவீதம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 77.76 சதவீதம், பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதம், திருவலம் பேரூராட்சியில் 80.7 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மொத்தமாக 66.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

மொத்தமாக ஒரு மாநகராட்சி 2 நகராட்சி 4 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 156 ஆண்கள், 3 லட்சத்து 162 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர் உள்பட 5 லட்சத்து 78 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 883 ஆண்கள், 1லட்சத்து 97 ஆயிரத்து 780 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 11 பேர் உள்பட 3 லட்சத்து 85 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதனால் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை பெண்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

Similar News