உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

வேலூர் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-02-20 14:36 IST   |   Update On 2022-02-20 14:36:00 IST
வேலூர் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சி களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் 22-ந் தேதி நடைபெறுகிறது.

வேலூர் மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது. இதேபோல குடியாத்தம் நகராட்சிக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம் பட்டு நகராட்சி வாக்கு எண்ணிக்கை மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

ஒடுகத்தூர், பள்ளி கொண்டா பேரூராட் சிகளுக்கு பள்ளி கொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை பள்ளி கொண்டா டிரங்ரோட்டில் உள்ள ஆர்.சி.எம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டது. 

வாக்குச்சாவடிகளில் இருந்து அந்தந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் அனைத்து எந்திரங்களும் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாக்கு பெட்டிகள் இருக்கும் அறைகள் மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.அந்த அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

மேலும் மையங்கள் நுழைவுவாயில் பகுதிகளில் கண்காணிப்பு கேமராயக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக் கப்படுகிறது.

Similar News