உள்ளூர் செய்திகள்
உடன்குடி ஏலக்கடையில் குவிந்துள்ள பனங்கிழங்குகள்.

உடன்குடியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகம்

Published On 2022-02-20 07:59 GMT   |   Update On 2022-02-20 07:59 GMT
உடன்குடி வட்டார பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளது. தற்போது அவை இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளது. அதனால் இவை இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது.  உடன்குடி பகுதியில் கருப்பட்டிக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. தற்போது பனங் கிழங்குக்கும் அந்த சிறப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சல் மிகமிக அதிகமாக உள்ளது. தை மாத சீசன் முதல் விற்பனைக்கு வந்த பனங்கிழங்கு தற்போதும் மூடை மூடையாக விற்பனைக்கு வருகிறது.

ஒரு கிலோ கிழங்கு ரூ.20 முதல் ரூ.40 வரை ஏலம் எடுத்து அதை சாக்குகளில் அடுக்கி கட்டப்பட்டு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களுக்கு செல்கிறது,
இந்தியாவில் மும்பை, கேரளா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு எல்லாம் செல்கிறது.

அங்கு உடன்குடி பனங்கிழங்கு, கருப்பட்டி என எழுதி வைத்துவிற்பனை செய்யப்படுகிறது, இதுபற்றி உடன்குடியில் ஒரு கமிசன் கடை வியாபாரி ஒருவர் கூறியதாவது:--
இந்த ஆண்டு தை மாதம் அதிக அளவில் பனங்கிழங்கு வரவில்லை.அதனால் ஒரு கிலோ ரூ.80 முதல் விற்பனையானது.

தற்போது பனங்கிழங்கு அதிகமாக விற்பனைக்குவருகிறது, பனைமரம் தொழில் செய்யும் அனைத்து விவசாயிகளும் பனங் கிழங்கு உற்பத்தி செய்வதற்காக பனை மர விதைகளை விதைத்து உள்ளார்கள்.

அதனால் அதிக அளவில் பனங் கிழங்கு விற்பனைக்கு வருகிறது. இவை தமிழகம் மட்டுமல்ல. இந்தியாவில் தமிழர்கள் வசிக்கும் அனைத்து பகுதிக்கும் செல்கிறது. மேலும் கருப்பட்டிபோல இங்குஉள்ள பனங்கிழங்குக்கும் தனி ருசி உண்டு என்று கூறினார்.
Tags:    

Similar News