உள்ளூர் செய்திகள்
100 வயதிலும் ஆர்வமாக வந்து ஓட்டு போட்ட மூதாட்டிகள்
வேலூரில் 100 வயதிலும் ஆர்வமாக வந்து மூதாட்டிகள் ஓட்டு போட்டனர்
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து காலை 7 மணிமுதல் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களிக்க வந்தவர்களில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்பட தள்ளாத வயதிலும் மூதாட்டிகள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வீல் சேரில் அமர்ந்து வந்து மூதாட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார். காகித பட்டறையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு ஊன்று கோலுடன் வந்து மூதாட்டி வாக்களித்தார்.
இதேபோல கண்ணமங்கலம் பேரூராட்சியில் வாக்கு மையத்திற்கு 100 வயதுடைய மூதாட்டியை அவரது வாக்கை பதிவு செய்ய வாக்கு மையத்திற்கு தூக்கி வந்தனர்.
இதேபோல ராணிப் பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாக்கு மையத்திற்கு வந்து ஆர்வமுடன் தனது வாக்கை பதிவு செய்தார்.
கர்ப்பிணிகளும் வரிசையில் நின்று காத்திருந்து ஓட்டு போட்டனர். முதல் முறையாக ஓட்டு போடும் இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.