உள்ளூர் செய்திகள்
கடும் குளிரை பொருட்படுத்தாமல் வாக்களித்த பொதுமக்கள்
கோபிசெட்டிபாளையம் நகர பகுதியில் இன்று பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவியது. ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கு பொதுமக்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
கோபி:
கோபி நகர பகுதியில் இன்று பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவியது. ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கு பொதுமக்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 59 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் இன்று காலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது. வாக்களிப் பதற்காக வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர்.
அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கையுறை வழங்கப் பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
கோபி நகர பகுதியில் இன்று பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவியது. ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கு பொதுமக்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
பின்னர் படிப்படியாக வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பாதுகாப்பு பணிகளை கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
கோபி நகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.