உள்ளூர் செய்திகள்
சத்துவாச்சாரி சி.எம்.சி காலனியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வெறிச்சோடிய வாக்குப்பதிவு மையம்.

வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது 2 எந்திரங்கள் மாற்றப்பட்டன

Published On 2022-02-19 15:08 IST   |   Update On 2022-02-19 15:08:00 IST
வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதான நிலையில் 2 எந்திரங்கள் மாற்றப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது.

காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது.

வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 

2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது.இதையடுத்து30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

Similar News