உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் 2 மற்றும் 3-வது வார்டுகளில் வரிசை இல்லாமல் வாக்காளர்கள் வந்தபடி வாக்காளித்து சென்றனர்.

கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான வாக்குப்பதிவு

Published On 2022-02-19 14:07 IST   |   Update On 2022-02-19 14:07:00 IST
கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான நிலையில் வாக்குப்பதிவு நடந்தது
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேருராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

இதற்காக கண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் ஒரு வாக்குச்சாவடியும், கண்ணமங்கலம் இந்து ஆரம்பப்பள்ளி வளாகத்தில் 9 வாக்குச்சாவடிகளும், முஸ்லிம் துவக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளும், புதுப்பேட்டை ஆரம்பப் பள்ளி வளாகத்தில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

கண்ணமங்கலத்தில் 6,928 வாக்காளர்கள் உள்ளனர். பெண் 3,645, ஆண் 3,282, திருங்கை ஒருவர் உள்ளனர்.

9&வது வார்டில் இருளர் இனத்தை சேர்ந்த 27 பேர் வரிசையில் சென்று வாக்களித்தனர். 

கண்ணமங்கலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் காலை 8.30 மணி வரை 884 வாக்குகள் பதிவாகி இருந்தது. 

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ் பெக்டர்கள் விஜயகுமார், தரணி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News