உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.
4நகராட்சிகள், 10பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. நகராட்சிப் பகுதிகளில் 123 வார்டுகளிலும், போளூர் பேரூராட்சியில் ஒரு வார்டில் மட்டும் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால் பேரூராட்சி பகுதிகளில் 149 வார்டுகளிலும் என மொத்தம் 272 வார்டுகளில் தேர்தல் நடக்கிறது.
இதில் தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 1,214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாளை (19-ந்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் வீடு வீடாகச் சென்றுஅங்கு எத்தனை ஓட்டுகள் உள்ளது என்பதை கணக்கிட்டு பண பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் வேட்பாளர்கள் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியும் ஆதரவை திரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.