உள்ளூர் செய்திகள்
வேலூரில் வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைப்பு
மாநகராட்சி தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது
வேலூர்
வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதனையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தக்கூடிய மை உள்ளிட்ட பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:&
வேலூர் மாவட்டத்தில் 7 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தேர்தலில் 3, 200 அரசு ஊழியர்கள் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று 3&ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.இதில் அவர்களுக்கு பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
நாளை வாக்குப் பதிவின் முடியும் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.