உள்ளூர் செய்திகள்
வெளிநாட்டு மோசடி கும்பலுடன் 4 பேருக்கு தொடர்பு? சத்துவாச்சாரியில் உளவுத்துறை அதிரடி விசாரணை
வெளிநாட்டு மோசடி கும்பலுடன் 4 பேருக்கு தொடர்பா என சத்துவாச்சாரியில் உளவுத்துறை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச் சாரியில் உள்ளூர் கட்டணத்தில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சவுதி, அரேபியா,ஓமன்,கத்தார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இன்டர்நேஷ்னல்(ஐஎஸ்டி) அழைப்புகளை ஆப்மூலமாக வழங்கி வந்தனர்.
இதனால், தொலைத்தொடர்பு துறைக்கு தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
சத்துவாச்சாரி தாட்கோ நகரில் உள்ள கடையை வாடகை எடுத்து, 4 பேர் வீட்டு உபயோக பொருளான பிரிட்ஜ் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தனர். இவர்கள் கூட்டாக சேர்ந்து உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு அழைப்பு வழங்கியது தெரியவந்தது.
இந்நிலையில், இவர்களின் கடைக்கு தனிப்படை போலீசார் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்றிரவு சென்றனர். கடையில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்துவாச் சாரியை பகுதியை சேர்ந்த அப்துல்ஜாபர்(27)உட்பட 4 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இன்று காலை தாட்கோ நகரில் உள்ள கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கிருந்த ஆவணங்கள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வற்றை அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.கடையில் இருந்து நவீன கருவிகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சாதரணகட்டண அழைப்பில் எப்படி வெளி நாடுகளுடன் தொடர்பு கொண்டார்கள். வெளிநாட்டு மோசடி கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா-? எந்தெந்த நாடுகளுக்கு யாரிடம் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். அவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பில் மட்டுமே இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள் ளார்களா? உட்பட பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.