உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்துக்கு அலங்கார ஊர்தி இன்று வந்தது. கலெக்டர் முருகேஷ் மற்றும் மாணவ -மாணவிகள் ஆர்வமுட

சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி வரவேற்பு

Published On 2022-02-17 14:59 IST   |   Update On 2022-02-17 14:59:00 IST
ஆரணி, திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி வரவேற்றனர்.
ஆரணி:

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி விடுதலை போரில் தமிழகம் என்ற தலைப்பில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வாகன ரத ஊர்தியை நேற்று ஆரணி அருகே திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வெள்ளேரி கிராமத்தில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்சினி தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திக்கு சிவப்பு கம்பளம் விரித்து பேண்டு வாத்தியம் நாதஸ்வரம் முழுங்க பெண்கள் இருபக்கமும் நின்று மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டு பாரதியாரின் சுதந்திர போராட்ட கவிதைகளை மாணவர்களின் பரதநாட்டியம் மூலமாக எடுத்துரைக்கபட்டன.

மேலும் இந்த அலங்கார ஊர்தி ரதத்தில் சுதந்திர போராட்ட வீரர்களாக வீரமங்கை வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் பாரதிதாசன் வேலூர் கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை குறிக்கும் விதமாகவும் இருந்தன. 

இதனை பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து மலர்தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்த ரத ஊர்தி போளுர் கலசபாக்கம் வழியாக சென்று திருவண்ணாமலைக்கு ஈசானிய மைதானத்துக்கு இன்று வந்தது. கலெக்டர் முருகேஷ் மலர் தூவி வரவேற்றார். அலங்கார ஊர்தியை மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

மேலும் அங்கு இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Similar News