உள்ளூர் செய்திகள்
காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகரின் கதி என்ன?
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டை 15-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் மங்கனன் என்கிற முனிய கவுண்டர் (64).
இவர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வேலையை முடித்து வீட்டருகே உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். சிறிது தூரம் சென்றதும் திடீரென கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் திடீரென சத்தம் கேட்கவில்லை அதன் பின் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தேடியுள் ளனர்.
பிறகு அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அந்தியூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜேசுதாஸ் தலைமையில் இன்று காலை முதல் தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவரது மனைவி சண்முகவள்ளி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு பிரபு (39) என்ற மகனும் சித்ரா (34) என்ற மகளும் உள்ளனர்.