உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்ட வந்த ஜவுளி சிறு வியாபாரிகள்

ஜவுளி சிறு வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-02-16 15:33 IST   |   Update On 2022-02-16 15:33:00 IST
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜவுளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜவுளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று ஜவுளி சிறு வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 35 வருடத்திற்கும் மேலாக கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை)யில்  உள்ள பழைய கட்டிட கடைகள், இரும்புப் பெட்டி கடைகள் என 240-க்கும் மேற்பட்ட கடைகளில் சிறு ஜவுளி வியாபாரம் செய்து வந்தோம். அதற்கான வாடகையை மாதம் தவறாமல் முறையாக மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம்.

 இதை போல் 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்ட வாடகையையும் முறையாக செலுத்தி வியாபாரம் செய்து வந்தோம். இந்நிலையில் கடந்த 2019&ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  புதிய ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்படுகிறது என்று கூறி எங்களுக்கு இடங்கள் காலி செய்யக் கோரி  நோட்டீஸ் வழங்கினர்.

இதனால்  எங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் என்று  கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். இதன்பேரில் மாநகராட்சி நிர்வாகம் அதே பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி கொடுத்தது. அங்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம நிர் ணயிக்கப்பட்டது. அதை  நாங்கள் முறையாக செலுத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. அதிக முதலீட்டில் வைப்பீடு செய்து வேறு தொழில் தொடங்க முடியாது.

எங்களுக்கு தெரிந்த தொழில் இந்த சிறு ஜவுளி வியாபாரம் தான். இதை நம்பி தான் எங்கள் வாழ் வாதாரம் உள்ளது.  மாநக ராட்சி நிர்வாகம் புதிய கட்டிடம் கட்டும் பணி முடிந்து புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் விட்டால் எங்களால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்க முடியாது. பல ஆண்டுகளாக தங்க ளோடு இணைந்து ஒதுக்கப் பட்ட பழைய கட்டிட கடைகளில் சிறு ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம்.

எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் முன்னுரிமை அடிப் படையில் நியாயமான வைப்பு தொகை மற்றும் வாடகை நிர்ணயம் செய்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் எங்களுக்கு கடைகளை ஒதுக்கி   எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Similar News